Categories
அரசியல் மாநில செய்திகள்

அந்தர் பல்டி அடித்த அர்ஜுன மூர்த்தி… ரஜினி வேதனை?…!!!

தமிழகத்தில் ரஜினி கட்சி தொடங்க வில்லை என்றதும் பாஜகவுக்கு ஆதரவாக அர்ஜுன மூர்த்தி பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர்.

இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். என்னை நம்பி என்னுடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. முடிவு பற்றி அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டுமே தெரியும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அர்ஜுனா மூர்த்தி ரஜினி கடும் மன உளைச்சலோடு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் பாஜகவோடு எனக்கு நல்ல உறவு உள்ளது. ரஜினி ஒரு கண் என்றால் மோடி மற்றொரு கண் என கூறியுள்ளார். ரஜினி கட்சி ஆரம்பிக்க வில்லை என்றதும் பாஜகவுக்கு ஆதரவாக பேசும் இவருக்கு ரஜினி பதவி கொடுத்தது வேதனை அளிக்கிறது.

Categories

Tech |