கண்ணாடிப் பொடியால் செய்யப்பட்ட காத்தாடி நூல் கழுத்தில் சிக்கியதில் பைக்கில் சென்றவர் உயிரிழந்தார். டெல்லி சாஸ்திரி பார்க் மேம்பாலத்தில் வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. 34 வயதான விபின் குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். ரக்ஷா பந்தனைக் கொண்டாட விபின் தன் சகோதரி இருக்கும் இடத்திற்கு தனது மனைவியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது இந்த விபத்து நடந்துள்ளது.
கழுத்தில் கயிறு அறுத்து, படுகாயமடைந்த விபின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் கடும் ரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்தார். நாட்டில் தடை செய்யப்பட்ட கண்ணாடி துகள்கள் பூச்சு கொண்ட சீன காத்தாடியால் இந்த விபத்து ஏற்பட்டது. சீன செயற்கை நூல்களைப் பயன்படுத்தி பட்டம் பறக்கவிடுவது ஆபத்தானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுட்டிக் காட்டியிருந்தது.