பெண்கள் பிறப்புறுப்பின் உட்புறத்தில் எக்காரணத்தைக் கொண்டும் சுத்தப்படுத்த முயலக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாம் தினந்தோறும் குளிக்கும் போது சில முக்கிய குறிப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும். அதன்படி பெண்கள் பிறப்புறுப்பின் உட்புறத்தில் எக்காரணம் கொண்டும் சுத்தப்படுத்த முயலக்கூடாது. அங்கு சோப்பு போட்டு கழுவதையும், பெர்ஃப்யூம் அல்லது டியோடரன்ட் ஸ்பிரே செய்வதை தவிர்க்க வேண்டும். நறுமணப் பொருட்கள் மற்றும் சோப்புகளின் ரசாயனங்கள் பிறப்புறுப்பில் உள்ள இயல்பான திரவங்களின் தன்மைகளை மாற்றிவிடும்.
அதனால் எரிச்சலும் ஏற்படலாம். ஆகவே பிறப்புறுப்பின் வெளிப்புற பகுதியில் தினமும் சுத்தமான நீரைக் கொண்டு சாதாரணக் குளியல் சோப்பு பயன்படுத்தி மென்மையாக சுத்தப்படுத்தலாம். அவ்வாறு செய்யாமல் உள்ளே சுத்தப் படுத்த முயல்வது ஆபத்தில் முடியும்.