தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து மத்தியில் ஆளும் பாஜக அரசின் 8 ஆண்டுகள் சாதனை குறித்து விரிவாகப் பேசினார். அப்போது, 2014 ஆம் ஆண்டில் இருந்து படிப்படியாக வெற்றிகளை குவித்து வரும் பாஜக. தற்போது 18 மாநிலங்களில் ஆளும் கட்சியாக இடம்பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் திமுக ஆட்சி காலம் நடக்கலாம். ஆனால் தமிழக மக்களின் தேவையை கேட்டறிந்து மத்திய அரசிடமிருந்து அண்ணாமலை பெற்று தந்து கொண்டிருக்கிறார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக செயல்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியிருப்பது பற்றி கேள்வி கேக்கப்பட்டது. அதற்கு, எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெளிவான விளக்கத்தை கொடுத்திருந்தார், எந்த ஒரு கட்சியும் நாங்கள் முதன்மையாக காட்சியாக வரவேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் எங்களின் நடவடிக்கைகள் மக்கள் எப்படி விரும்புகிறார்களோ அதனைப் பொறுத்தே அமையும் என்று அவர் கூறியிருந்தார். அதுதான் எங்களின் நிலைப்பாடும். பாஜக எங்கள் கட்சி, அதை மக்களிடம் எப்படி கொண்டு செல்ல வேண்டுமோ அப்படியே கொண்டு செல்வோம்.
அதுமட்டுமில்லாமல் நாங்கள் அவர்களுக்கு சாதகமாக பேசிவிட்டால் ஒரே கட்சியாக மாறிவிடுவோம். எங்களுடைய பணியை சிறப்பாக செய்து பெஸ்ட் எதிர்க்கட்சியாக என்றும் இருக்கிறோம். மேலும் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம். இதனை மக்கள் அறிவார்கள் என்று தெரிவித்தார். இதனையடுத்து கேஸ் விலை ஏன் குறையவில்லை? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, திமுக தேர்தல் அறிக்கையில் கேஸ் விலை குறைக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் ஏன் அவர்கள் குறைக்கவில்லை இந்த கேள்வியை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் மது பழக்கத்தால் பல பெண்கள் விதவை ஆகினர் என்று தங்கள் கட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை தடை செய்யப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறியிருந்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடனே டாஸ்மாக்கை திறந்து வைத்து போலீஸ் காவல் போடபட்டுள்ளது என்று அவர் ஆவேசமாக குற்றம் சாட்டினார்.