நெல்லையில் மீண்டும் படையெடுக்க ஆரம்பிக்கும் கொரோனாவால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைவருக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இத்தொற்று பரவலைத் தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் அரசாங்கத்தின் முயற்சியாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பில் மெது மெதுவாக குறையத் தொடங்கிய கொரோனா தற்போது கோரத்தாண்டவத்தை ஆரம்பிக்க தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொரோனா தொற்று பாதித்துள்ளது.
அதாவது பாளையங்கோட்டையில் வசித்து வரும் 50 வயதான மீன் வியாபாரி சமீப காலத்தில் சென்னைக்கு சென்று திரும்பியுள்ளார். இதனால் இவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்ததுள்ளர்கள் இதில் அவர்களுக்கும் தொற்று உறுதியானதால் அனைவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். அந்த வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்கள் வசித்து வரும் பகுதியை கயிறு கட்டி எவரும் உள்ளே செல்லாதவாறு அடைந்துள்ளார்கள்.