சீனாவில் ஆசனவாயில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் பென்குயின் போல நடந்து வரும் காட்சி வைரலாகி வருகிறது.
சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பை கண்டறிய உலகம் முழுவதிலும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதனைத் தவிர பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் இணைந்து கொரோனா பரிசோதனை கருவிகள் உருவாக்கியுள்ளன. இருந்தாலும் கொரோனா பாதிப்பை மிகத் துல்லியமாக கண்டறிவதற்கு பிசி ஆர் பரிசோதனையில் சிறந்தது. இந்நிலையில் சீனாவில் ஆசனவாய் கொரோனா பரிசோதனை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் அதிக அளவு ஆபத்து இருப்பதாக நினைப்பவர்கள் இந்த பரிசோதனையை செய்து கொள்ளலாம். அதன் மூலம் மிக துல்லியமான முடிவுகள் விரைவில் கிடைக்கும். அதன்படி சீனாவின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆசன வாய் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசனவாயில் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட சீன நாட்டை சேர்ந்தவர்கள் பென்குயின் போல நடந்து வருவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை பார்க்கும் சிலரும் அதை உண்மை என நம்பி பலருக்கும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் அது போலியான வீடியோ என்று சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் ஆரோக்கியமாக இருக்கும் நபர்களுக்கு இந்த ஆசன வாய் பரிசோதனை செய்யப்படுவதில்லை என்றும், அவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டவர்கள் யாரும் பென்குயின் போல நடப்பதில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.