அந்தரங்கப் பகுதியைச் சுற்றியுள்ள கருமையை நீக்க என்ன வழி என்பதனை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்:
அழகு பராமரிப்பு என்பது முகம், கை கால்கள் மட்டுமின்றி, அந்தரங்கப் பகுதிகளையும் சேர்த்து பராமரிப்பதே முழுமையான கவனிப்பு ஆகும். ஆகையால் வீட்டுல் இருக்கும் பொருட்களை வைத்தே அந்தரங்கப் பகுதியில் தோன்றும் கருமையை நீக்குவதற்கான வழிகளை பார்க்கலாம்.
5 எளிய டிப்ஸ்:
ஒரு பௌலில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், தேன் 1 ஸ்பூன் எடுத்து, அதனை சூடாக்கியப்பின் குளிர வைத்து, பின் அந்த இடத்தில் மசாஜ் செய்து, 15 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும். இப்படி வாரம் 2முறை செய்தால் கருமை காணாமல் போகும்.
ஒரு விரல் அளவு பஞ்சை மோரில் மூழ்க வைத்து, பின் அதை கருமை உள்ள பகுதியில் தேய்த்து 15 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் கருமை நீங்கும்.
வெள்ளரி, கற்றாழை சதை இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து அந்த இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் ஊறியபின் எடுத்து விடவும்.
ஒரு ஸ்பூன் தயிரை தினமும் அந்த இடத்தில் தடவி 7 நிமிடங்கள் ஊறவைத்த பின் துடைத்து விடவும். நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.
முக்கியமாக ஆலிவ் எண்ணெய்யை அந்தரங்கப் பகுதியை சுற்றி மசாஜ் செய்து வர கருமை மட்டுமல்ல சுருக்கங்களும் நீங்கி விடும்.