சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற மாபெரும் இயக்கம் அனைத்து சமுதாய மக்களையும் பண்பாகவும், அன்பாகவும் ஒருங்கிணைத்து, ஒரு தாய் மக்களாக கொண்டு சென்ற இயக்கமாக இருந்தது.
இந்த இயக்கத்தை இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அவர் வன்னிய சமுத்திற்கும், அவர் சார்ந்திருக்கும் கொங்கு கவுண்டர் சமுதாயதிறக்குமான கட்சியாக மாற்றிவிட்டார்.இது அழிவை நோக்கிய பாதையாகவே அமையும்.
எங்கள் சமூகத்துக்கும் இட ஒதுக்கீடு பெறுகின்ற வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.அடிக்கடி சொல்கின்றார்கள்… ஒன்றரை கோடி தொண்டர்கள் இயக்கம், ஒன்றரை கோடி தொண்டர்கள் என்று சொல்கிறார்கள்… கணக்கெடுத்துப் பாருங்கள் அந்த ஒன்றரை கோடி தொண்டர்களின் 75 லட்சம் தொண்டர்கள் நான் சார்ந்திருக்கும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது.
இந்த நிலையில் நாங்கள் இல்லாமல் இந்த அரசை யாரும் தீர்மானிக்க முடியாது என்பதை இந்த நேரத்திலே நான் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கின்றேன் என கருணாஸ் கூறினார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுகின்றது எனவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.