ரஜினியின் தலைவர் 169 ஆவது படத்தில் நடிப்பது குறித்து சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் அண்மையில் பீஸ்ட திரைப்படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடலை எழுதியிருந்தார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் தலைவர் 169 படத்தில் நடிக்க நடிக்க இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றார்கள். இந்நிலையில் இது பற்றி சிவகர்த்திகேயன் கூறியுள்ளதாவது, யாருக்குத்தான் ரஜினி சாருடன் நடிப்பதில் ஆர்வம் இருக்காது. ஒருவேளை நெல்சன் என்னை ரஜினியின் மகனாக நடிக்க கூப்பிட்டால் உடனே ஓடி விடுவேன். அந்த ஒரு அழைப்பிற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் ரஜினியின் தீவிர ரசிகர் மற்றும் நெல்சனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.