Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த கப் இல்லன்னா என்ன இந்த கப் இருக்கே… பிக்பாஸ் சனம் ஷெட்டி வெளியிட்ட பதிவு…!!

பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட சனம் செட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸில் இருந்து ரேகா, வேல்முருகன் ,சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா ,சம்யுக்தா சனம், ரமேஷ் ,நிஷா ஆகியோர் வெளியேறியுள்ளனர். ரசிகர்களின் பேராதரவு இருந்தும் சனம் செட்டி வெளியேற்றப்பட்டது மக்களால் ஏற்றுக்கொள்ளவில்லை.

சமீபத்தில் சனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் காபி கப் வைத்திருக்கும் புகைப்படத்துடன் ‘அந்த கப் இல்லன்னா என்ன இந்த கப் இருக்கே. பிக்பாஸ் வீட்டில் என்னுடைய பேவரைட் காபி கப் . மறக்க முடியாத பல ஞாபகங்கள் . பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் எனது நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.  தகுதியான போட்டியாளர் வெற்றி பெறட்டும்’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |