தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக மாளவிகா மோஹனன் தற்போது வலம் வருகிறார். ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் நாயகியாக இவர் அறிமுகமானார். இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே அவர் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பிரபலமானவர். இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அவரின் சமூக வலைத்தளமான டுவிட்டரில், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார்.
அப்போது ரசிகர் ஒருவர், தனுஷுடன் மாறன் படத்தில் நடித்திருந்த படுக்கை காட்சியை புகைப்படமாக எடுத்து,இந்த காட்சிக்கு எத்தனை டேக் எடுத்தீர்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு மாளவிகா,இது உங்களின் மோசமான சிந்தனையை வெளிப்படுத்துகிறது என பதிலடி கொடுத்துள்ளார். சமீபகாலமாக ரசிகர்கள் நடிகைகளிடம் இது போன்ற கேள்விகளை கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.