Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அந்த காட்சியில் தனுஷுடன் நடித்த பிரபல நடிகை”… அதற்கு வாங்கிய சம்பளம்… விமர்ச்சிக்கும் நெட்டிசன்ஸ் …!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் வடசென்னை திரைப்படத்தில் தனுஷ் உடன் நெருக்கமாக நடித்ததற்கு எவ்வளவு சம்பளம் பெற்றார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஒவ்வொரு திரைப்படத்திலும் புது விதமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். பிரபல  ஹீரோயின் குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க தயங்குவார்கள். ஆனால் இவர் துணிந்து நடித்துள்ளார். இவர் தனுஷுக்கு ஜோடியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் இவர் தனுஷுடன் முத்த காட்சிகள், நெருக்கமான காட்சிகள் என நடித்திருந்தார். இந்நிலையில் அதற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த செய்தி வெளியாகி இருக்கின்றன. இவர் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக ரூபாய் 50 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம். இதை அறிந்த இணையதளவாசிகள் முத்தக்காட்சிக்கு 50 லட்சமா? என கேள்வி கேட்டு வருகிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |