தமிழ் கடவுள் முருகனை வழிபடும் கந்த சஷ்டி கவசத்தை சர்ச்சையாக விமர்சனம் செய்ததாக புகார் எழுந்ததையடுத்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலின் தொகுப்பாளர் சுரேந்திரன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் பூதாகரமாக எழுந்துள்ளது. பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள், விவாதங்கள் அனல் பறக்கின்றந்தன. இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் மீது கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என பல தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கந்த சஷ்டி கவசத்தை தவறாக விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கோடிக்கணக்கான தமிழர்கள் வழங்கும் முருகப்பெருமானை இழிவு படுத்துகின்ற அந்தக் கூட்டத்திற்கு பின்னால் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம் என்று எச்சரித்துள்ளார். அதே நேரத்தில் பெரியார் சிலை அவமதிப்பு குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய, பௌத்த மதங்களை கடந்து, கொரோனா யாருக்கு வந்தாலும் அம்மாவின் அரசு கனிவுடன் கவனித்து வருகிறது. இதற்கிடையே கோடிக்கணக்கான தமிழர்கள் வணங்கும் முருகப்பெருமானை இழிவுபடுத்துகின்ற அந்த கூட்டத்திற்கு பின்னால் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம்
— KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) July 17, 2020