நடிகர் கமல்ஹாசன் பல்வேறு திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல், திரைப் படங்களையும் இயக்கி வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் கமலஹாசனின் முன்னாள் மனைவியும் அவருடைய மகள் சுருதி, அக்ஷராவின் தாயாருமான சாரிகா கொரோனா காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் சம்பளத்துக்கு நடித்ததாக தெரிவித்துள்ளார்
கமலஹாசனுடன் விவாகரத்துக்குப் பின் மும்பையில் வசித்து வரும் சாரிகா ஒரு சில பாலிவுட் படங்கள் மற்றும் ஓடிடி தொடர்களில் நடித்து வருகிறார். ஸ்ருதி அக்ஷரா லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நிலையில் அவருடைய தாயார் ஏன் வெறும் இரண்டாயிரத்துக்கு நடிக்க வேண்டும் என்று கேள்வி எழும்பியுள்ளது.