Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

“அந்த சம்பவத்தால் அமைதியாக போகும் விஜய்..?”… இதுதான் காரணம்… பிரபல பத்திரிக்கையாளர் பேச்சு…!!!

பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் இல்லாததற்கு காரணம் விஜய் தான் என பிரபல பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் அப்டேட்டுகள் அவ்வபோது வெளியாகி கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தில் ஆடியோ லான்ச் இல்லாததற்கு காரணம் விஜய் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்ததால் உதயநிதிக்கு பிடிக்காததனால் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் பிஸ்மி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது இதுபற்றி கூறியுள்ளதாவது, “பீஸ்ட் ஆடியோ லான்ச் நடக்காததற்கு காரணம் விஜய் தான். மாஸ்டர் படப்பிடிப்பின் போது நடத்தப்பட்ட ஐடி ரைட்டுக்கு பின் விஜய் அமைதியாகிவிட்டார். அதன்பிறகு எந்த பிரச்சனைக்கும் அவர் குரல் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதனால் ஆடியோ லான்ச் நடத்தப்பட்டால் அரசியல் குறித்து பேச வேண்டும். பேசாமல் விட்டால் விஜய் பயந்து விட்டார் என கூறுவார்கள். இதனால் ஆடியோ லான்ச்சை விஜய் புறக்கணித்து இருக்கலாம்” என கூறியுள்ளார்.

 

Categories

Tech |