Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அந்த சான்றிதழ் பெறுவது கஷ்டம்” 14 1/2 லட்ச ரூபாயை இழந்த வாலிபர்….. போலீஸ் விசாரணை….!!!

வேலை வாங்கி தருவதாக பல லட்ச ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி லட்சுமி நகரில் உமாசங்கர்(23) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உமாசங்கரின் இணையதள முகவரிக்கு கனடாவில் மெடிக்கல் சம்பந்தமான வேலை இருப்பதாக தகவல் வந்தது. அதில் இருந்த செல்போன் எண்ணை உமாசங்கர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் விசா, மருத்துவ பரிசோதனை, பயங்கரவாத எதிர்ப்பு சான்றிதழ் ஆகியவற்றை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் பயங்கரவாத எதிர்ப்பு சான்றிதழ் பெறுவதற்கு அதிகளவு பணம் தேவைப்படும் எனவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய உமாசங்கர் 24 தவணையாக அந்த நபர் கொடுத்த வங்கி கணக்கிற்கு 14 லட்சத்து 63 ஆயிரத்து 800 ரூபாயை அனுப்பியுள்ளார். ஆனால் அந்த நபர் கனடாவில் வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததை அறிந்த உமாசங்கர் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |