படுக்கையறை காட்சியில் நடித்ததற்காக பிரபல நடிகை வருத்தத்தில் இருக்கிறாராம்.
வேறு நாட்டு மூன்றெழுத்து நடிகை பல திரைப்படங்களில் நடித்து சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார். இவர் முதல் படத்திலேயே கிராமத்து வேடத்தில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார். முதல் திரைப்படம் மட்டும் தான் அவரது நடிப்புக்கு நல்ல கதைகளமாக அமைந்தது. அடுத்தடுத்து திரைப் படங்களில் ஒப்பந்தமான இவர் குறிப்பாக படுக்கை அறை காட்சிகள் முதலான வேடத்தில் நடிக்க வேண்டியதாயிற்று.
இந்த கதாபாத்திரத்தையும் அவர் சிறப்பாக நடித்து காட்டினார். இந்நிலையில் இவருக்கு அவருடைய நாட்டிலும் தமிழிலும் வாய்ப்புகள் அவ்வளவாக இல்லாமல் இருப்பதால் அவர் மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம். இதனால் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கிளாமர் காட்டுகின்றேன். ஆனால் என் திறமையை காட்டும் வேடத்தில் நான் நடிக்கும்படி காட்சி இருக்க வேண்டும் என நிபந்தனை வைத்திருக்கிறாராம்.