Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அந்த சீன் வேற லெவல்ல இருக்கும்… சிவகார்த்திகேயனுடன் நடித்ததில் மகிழ்ச்சி… டுவிட் செய்த எஸ்.ஜே.சூர்யா…!!!

சிவகார்த்திகேயனுடன் நடித்த அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தற்போது வலம் வருகின்றார். இவர் புதுமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் முன்னணி நடிகர்கள் பலர்  படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது பிப்ரவரி 14 வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வருகின்ற மே 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் எஸ்.ஜே.சூர்யா உடன் டான் படத்தில் நடித்த அனுபவத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் கூறியுள்ளதாவது எஸ்.ஜே.சூர்யா உடன் பணியாற்றிய அனுபவத்தை மறக்கவே முடியாது. அவருடைய எனர்ஜிக்கு ஈடு இணையே இல்லை. அவருடன் பணியாற்றுவதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் பதிவிட்டதற்கு பதில் அளிக்கும் விதமாக எஸ்.ஜே.சூரியா நானும் உங்களுடன் பணியாற்றியதை மகிழ்ச்சியாக கருதுகிறேன் என பதிலளித்துள்ளார். மேலும் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த காட்சியில் என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அதை நீங்களும் படத்தில் பார்க்கும்போது உணர்வீர்கள் என்று கூறியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |