பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நல குறைவின் காரணமாக கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது 100 வயது ஆகிறது. அதன் பிறகு பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கேள்விப்பட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். மேலும் பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும் என்று டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Categories