தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அஞ்சலி. இவர் விளம்பரங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலககுக்கு அறிமுகமானார். ஆனந்தி எனும் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகையாக தென்மண்டல பிலிம் பேர் விருது கிடைத்தது.
இதனை அடுத்து அங்காடித்தெரு எனும் திரைப்படத்தில் கனியாக நடித்து அந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து பல படங்கள் நடித்திருந்தார் இந்த நிலையில் நடிகை அஞ்சலி தான் கண்ணீர் விட்டு அழுத நாட்களை நினைவு கூர்ந்துள்ளார். ஒரு நேர்காணலில் பேசிய அவர், “பிடிக்காத நடிகர்களோடு ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதோ, முத்தக் காட்சிகளில் நடிப்பதோ எளிதானது இல்லை. சில நேரங்களில் அப்படியான காட்சிகளில் நடித்தபின் கேரவேனில் உட்கார்ந்து அழுதிருக்கிறேன்” என்று பேசியுள்ளார். ஆனாலும் படத்திற்காக வேறு வழியில்லாமல் நடித்ததாக அஞ்சலி குறிப்பிட்டிருக்கிறார்.