தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக தனித்தனியாக இணையதளத்தில் அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தார் பலரும் முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது. ரஜினி, ஐஸ்வர்யா மீது கோபம் கொண்டதால் மனமிறங்கி தனுஷுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார் ஐஸ்வர்யா. ஆனால் தனுஷ் உன்னை போல் என்னால் உடனடியாக முடிவை மாற்றிக்கொள்ள முடியாது எனக்கு சிறிது காலம் வேண்டும் என கூறிவிட்டார். இதனால் ஐஸ்வர்யாவும் அவரின் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இருவரும் அவரவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள்.
இவர்கள் பிரிந்து ஆறு மாதங்கள் ஆகிய நிலையில் தற்போது மீண்டும் சேர்ந்து வாழப்போவதாக செய்தி பரவி வருகின்றது. முதலில் முடியாது என கூறி வந்த தனுஷ் தற்பொழுது மனம் இறங்கி இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் தற்பொழுது ஐஸ்வர்யா அவகாசம் கேட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில் அம்மா, அப்பா இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ வேண்டும் என பிள்ளைகள் விரும்புவதால் இருவரும் மீண்டும் இணை இருப்பதாக சொல்லப்படுகின்றது. வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் திருமண நாளன்று இவர்களும் இணையும் செய்தி குறித்த தகவலை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக செய்தி தற்பொழுது தீயாக பரவி வருகின்றது.