Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அந்த நோய் தாக்குதல் இல்லை” இறந்து கிடந்த யானை…. வெளியான ஆய்வக அறிக்கை…!!

வனப்பகுதியில் இறந்து கிடந்த யானைக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியானது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தடாகம் வனப்பகுதியில் கடந்த 17-ஆம் தேதி காட்டு யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் குழுவினர் யானையின் உடலில் இருந்து ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் ஆய்வு அறிக்கையில் காட்டுயானைக்கு ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதல் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கோவை கோட்ட வன அதிகாரி அசோக் குமார் கூறியதாவது, ஆய்வக அறிக்கையில் காட்டு யானைக்கு ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதல் இல்லை என்பது உறுதியானது. எனவே மற்றொரு யானையுடன் நடைபெற்ற சண்டையின் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக இந்த யானை இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து யானையின் உடலில் இருந்த 2 தந்தங்களும் அகற்றப்பட்டது. அதன்பின் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட உடல் வனப்பகுதியில் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |