செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்றுக்கொள்வோம் என்ற டிடிவி கருத்து குறித்த கேள்விக்கு, ஓ.பன்னீர் செல்வத்தை ஏற்றுக்கொள்வோம் என்பது டிடிவி தினகரனின் நட்பாசை. டிடிவி தினகரனின் அமமுக, அதிமுகவுக்கு எதிராகவும், புரட்சித்தலைருக்கு எதிராகவும், புரட்சி தலைவி அம்மாவுக்கு எதிராகவும் கட்சியாக ஆரம்பிச்சது போனி ஆகவில்லை.
இப்போ வருவாங்களா ? வருவாங்களான்னு வாசல் திறந்து வச்சிட்டு எந்த வகையிலாவது ட்ரை பண்ணுறாங்க. ஆனால் ஒரு தொண்டர் கூட அந்த கட்சிக்கு போக மாட்டாங்க. அந்த பக்கமே திரும்பி மாட்டாங்க எப்படிப்பட்ட அளவுக்கு வலை வீசினாலும் சரி, அந்த வலையில் சிக்காத மீன்கள் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சிங்கம் என்ற மீன்கள் இருக்கும்.
சசிகலா தொடர்ந்த வழக்கு விசாரணை குறித்த கேள்விக்கு, இந்தியாவினுடைய உயர்ந்த மன்றம் என்று சொன்னால் அது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தில் சசிகலாவும், டிடிவி தினகரனும் மனு போட்டு அது தள்ளுபடி ஆகிட்டு. உங்களுக்கு, அதிமுகவுக்கு சம்பந்தம் கிடையாது. 2019இல் கட்சியின் பொது குழுவில் எடுத்த முடிவின் படி ஒருங்கிணைந்த வழிகாட்டுதலால் கட்சி போயிட்டு இருக்கு.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை, கட்சி எல்லாம் நீங்க தான் என எங்களுக்கு கொடுத்துள்ளது. கிளை கழகத்தில் இருந்து தலைமை கழகம் வரை எல்லா நிர்வாகிகளும் மகிழ்ச்சியாக புரட்சித்தலைவி அம்மாவுடைய வழியில போயிட்டு இருக்கோம். சிவில் கோர்ட்டில் யார் வேணாலும் கேஸ் போடலாம். கேஸ் போடும்போது நோட்டீஸ் அனுப்புவாங்க. அதுக்கும், இதுக்கும் சம்பந்தம் கிடையாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பில் சிவில் கோர்ட் தலையிட முடியுமா ? உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது, அது தான் இறுதியான தீர்ப்பு என தெரிவித்தார்.