தமிழகத்தில் தற்போதுள்ள மாவட்டங்கள் போதாது எனவும் அதிக எண்ணிக்கையில் மாவட்டங்களை உருவாக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது , “ஆந்திராவில் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது அது 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மக்களின் வசதிக்காகவும் பொதுசேவைகளுக்காகவும் ஆந்திர மாநிலம் இவ்வாறு மாவட்டங்களைப் பிரித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. அதேபோன்று தெலுங்கானாவில் முதலில் 10 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. தற்போது அவை 33 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆந்திர மக்கள் பல வழிகளிலும் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மக்கள் தொகை 20 லட்சத்தையும் தாண்டி உள்ளது. ஆனால் ஆந்திராவில் பொருத்தவரையில் ஒரு மாவட்டத்திற்கான மக்கள்தொகை விகிதம் 18 லட்சம் ஆகும்.
தெலுங்கானாவில் ஒரு மாவட்டத்திற்கான மக்கள்தொகை விகிதம் 10 லட்சம் ஆகவும் உள்ளது. எனவே தமிழ்நாட்டிலும் 12 லட்சம் மக்களுக்கு ஒரு மாவட்டம் என பிரிக்கப்பட வேண்டும் கடந்த அதிமுக ஆட்சியில் மாவட்டங்கள் பிரிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து பாமக வலியுறுத்தி வந்ததை கருத்தில் கொண்டு 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இவை போதாது. மக்களின் சிரமத்தை குறைக்க மேலும் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட வேண்டும் 12 லட்சம் மக்களுக்கு ஒரு மாவட்டம் என்ற நிலை உருவாக வேண்டும் அதோடு இவ்வாறு மாவட்டங்கள் பிரிக்கப்படாமல் இருப்பது தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடைக் கல்லாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைவில் மாவட்டத்தை பிடிக்கும் நடவடிக்கையை செயல்படுத்த வேண்டும். என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.