Categories
தேசிய செய்திகள்

அந்த படத்தில் நடிக்க வைத்து டார்ச்சர்…. நான் தெரியாம சிக்கிட்டேன்…. முதல்வரிடம் இளைஞர் பரபரப்பு புகார்….!!!!

கேரளாவில் ஒப்பந்தம் போட்டு மிரட்டி ஆபாச படத்தில் நடிக்க வைக்கப்பட்டதாக முதல்வரிடம் வாலிபர் ஒருவர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெங்கனூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், அடல்ட்ஸ் ஒன்லி ஒடி டி தளம் மற்றும் படத்தின் இயக்குனர் மீது கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. ஆனால் ஆவது ஆபாச படம் என்று தெரியாமல் சிக்கி விட்டேன்.பின்னர் உண்மையை உணர்ந்ததும் அதில் இருந்து விலக முயற்சி செய்த போதும் ஒப்பந்தத்தை காட்டி மிரட்டினர்.

வாபஸ் வாங்கினால் கடும் இழப்பீடு கொடுக்க வேண்டும் என என்னை மிரட்டுகிறார்கள். தற்போது இந்த திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. நான் இத்தனை நாள் கட்டி வைத்த பெயர் அழிந்து விடும். அப்படி மட்டும் நடந்து விட்டால் தற்கொலையை தவிர வேறு வழி இல்லை. முதல்வரிடம் புகார் அளித்துள்ளேன். இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |