நடிகர் பாக்யராஜ் ஆர்.கே.செல்வமணியை கடுமையாக விமர்சித்திருக்கின்றார்.
ஆர்கே செல்வமணி தென்னிந்திய இயக்குனர் சங்கத்தின் தலைவராக இருக்கின்றார் . தென்னிந்திய இயக்குனர் சங்கத்திற்கான தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் செல்வமணி அணியை எதிர்த்து பாக்கியராஜ் அணி போட்டியிடவுள்ளது. இவ்வணியில் பார்த்திபன், வெங்கட் பிரபு தேர்தல் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். பாக்யராஜ் அணியான இமயம் அணியில் 30 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். இத்தேர்தலுக்கான அறிமுகக் கூட்டம் சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் நடைபெற்றிருந்தன.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாக்கியராஜ் பேசும் பொழுது. இத்தேர்தலில் போட்டியிட கட்டணத் தொகை அதிகமாக வசூலிக்கப்படுகிறது. ஆகையால் கட்டணத் தொகையை குறைக்க வேண்டும் என கூறியுள்ளார். இச்சங்கம் சார்பில் வழங்கப்படும் உதவித் தொகையை மாத இறுதியில் ரசீதுடன் கொடுக்கப்படும். இச்சங்கத்திற்கென தனியாக யூடியூப் சேனலானது ஆரம்பிக்கப்படும். தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதற்கு முன்பாகவே அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படும். நான் இத்தேர்தலில் வெற்றி பெற்றால் நிர்வாகிகளுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் என்னை தொடர்புகொண்டு கூறலாம். இத்தேர்தலில் நான் நின்றால் என்னுடைய பெயர் போய்விடும் என பலர் கூறினர். ஆனால் எனக்கு பயமில்லை.
எனக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லை என காமெடியாக கூறினார். இதுவரை தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணி நன்றாக சம்பாதித்து விட்டார். இத்தேர்தலில் நான் நிற்பது ஆர்கே செல்வமணிக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. நீ எடுத்த படம் எல்லாம் நன்றாக ஓடி விட்டது என கூறுகின்றார்கள் உண்மையிலேயே இத்திரைப்படத்தை நீதான் எடுத்தாயா? என பாக்கியராஜ் ஆர்.கே.செல்வமணியை விமர்சித்திருக்கின்றார்.