தபால் துறை அதிகாரி மீது மோசடி புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள சங்கம்பட்டி ரெட்டியார் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான சரவணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரவணன் தனது ஊரில் இருக்கும் கிளை தபால் நிலையத்தில் வைப்பு நிதியாக 2 லட்ச ரூபாயை தபால் நிலைய அதிகாரியான சுதாவிடம் கடலை 2019-ஆம் ஆண்டு கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து தபால் நிலைய உயர் அதிகாரிகள் ஆய்வு செய்த போது சரவணன் செலுத்திய பணத்தை யசோதா கையாடல் செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.