காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் கர்நாடக மாநில முதல்வராகவும் இருந்த சித்தராமையா டெல்லிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகுமாறு ராகுல் காந்தி என்னை வேண்டிக் கொண்டார். ஆனால் நான் அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டேன். மேலும் எனக்கு தேசிய அரசியலில் எவ்வித ஆர்வமும் கிடையாது. எனவே மாநில அரசியலில் மட்டுமே நான் ஈடுபாடு காட்டுவேன்” என்று கூறினார்.