Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அந்த” பழக்கம் இருக்க கூடாது…. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள வேந்தன்பட்டி கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமசிவம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பரமசிவத்தை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பரமசிவம் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |