Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்த பாடல் ஒரு நாளைக்கு 100 முறையாம்”….. அதிதி சொன்ன அந்த ஒத்த பதில்…. கொண்டாடும் விஜய் ரசிகாஸ்…!!!!!

அதிதி சங்கர் தான் அதிகம் விரும்பி கேட்கும் பாடல் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் சங்கரின் மகள் அதிதி சங்கர். இவர் கார்த்தி நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் அதிதிக்கு முதல் படம் என சொல்ல முடியாத அளவிற்கு தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இத்திரைப்படத்தையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் விரும்பன் திரைப்படத்தின் ப்ரோமோஷன்காக ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த பொழுது தொகுப்பாளர் நீங்கள் அதிகம் கேட்கும் பாடல் எது என கேட்ட பொழுது, தற்போது கஞ்சா பூ கண்ணால என கூறினார். இதற்கு முன்பாக பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடலை அதிகம் கேட்டதாக கூறினார். மேலும் அரபிக் குத்து பாடலை ஒரு நாளைக்கு 100 முறை கேட்பது தனது வழக்கம் என கூறியிருக்கின்றார் அதிதி. இதைக் கேட்ட விஜய் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றார்கள். மேலும் அவர் பேசிய வீடியோவையும் வைரலாக்கி வருகின்றார்கள்

Categories

Tech |