35 ஆவது அமைச்சராக பதவி ஏற்ற சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளரும் ஆன உதயநிதி அவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்டவை அடங்கியிருந்தது.
இந்நிலையில், கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் 36வது வார்டில், ‘மணக்களம் தெரு’ என்று பதிவேட்டில் உள்ளது. அந்த பெயரை நீக்கிவிட்டு, ‘உதயநிதி முதல் தெரு, இரண்டாம் தெரு, மூன்றாவது தெரு’ என பெயரை மாற்ற வேண்டும்’ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.