Categories
விளையாட்டு கிரிக்கெட்

‘அந்த பேட்ஸ்மேன் தா’…. அவர் களத்துல இருக்கும்வரை மேட்ச் முடியாதுங்க…. மார்க்கஸ்  ஸ்டாய்னிஸ் கருத்து….!!!!

ஐபிஎல் தொடர் குறித்து மார்க்கஸ்  ஸ்டாய்னிஸ்  அளித்துள்ள பேட்டியில் டோனியை பற்றி புகழ்ந்து பேசினார்.

பெங்களூருவில் ஐபிஎல் 15-ஆவது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற நிலையில், 204 வீரர்கள் மட்டுமே ஏலம் போயுள்ளனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 67 பேர் மற்றும் உள்நாட்டு வீரர்கள் 137 பேர் அடங்குவர். இவர்களின் மொத்த மதிப்பு  ரூபாய் 551.70 கோடி ஆகும். ஏலத்திற்கு முன்பு லக்னோ சூப்பர் கிங்ஸ் அணி கே.எல். ராகுல், ரவி  பிஷ்னோய், ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டாய்னஸ் ஆகியோர் தக்க வைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த மெகா ஏலத்திலும் க்ருனால் பாண்டியா, ஹோல்டர், கிருஷ்ணப்பா கௌதம், க்ருனால் பாண்டியா, ஹூடா போன்ற ஆல்-ரவுண்டர்களை தட்டி தூக்கியது. மேலும் கடந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக டெத் ஓவர்களில் அபாரமாக விளையாடி மேட்ச் வின்னராக இருந்தவர் மார்க்கஸ்  ஸ்டாய்னிஸ். இதேபோல் இவர் ஐபிஎல் 15 வது சீசனில் லக்னோ அணிக்காக சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடர் குறித்து மார்க்கஸ்  ஸ்டாய்னிஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, கடந்த ஆண்டு ஐபிஎல் அரையிறுதிப் போட்டி முடிந்த பிறகு, தோனி உடன் நான் பேசினேன். அப்போது அந்த போட்டி குறித்து நிறைய விஷயங்களை தோனி கூறினார். மேலும் பேசிய அவர், பொதுவாக களத்தில் தோனி இருக்கும் வரை நிச்சயம் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை அணிக்கும், ரசிகர்கள் மத்தியிலும் இருக்கிறது. வெற்றி பெற வாய்ப்பு குறையும்போது வித்தியாசமான முறையில் யோசித்து வெற்றியை தர போராடுபவர் தான், தோனி. ஆனால் என்னால் நிச்சயம் அப்படி யோசிக்க கூட முடியாது. மேலும் இதுதான் அவர் உருவாக்கி வைத்த கலை என்றும் எதிரணி தடுமாறும் போது அதை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுக் கொடுப்பதில் அவர் மிகவும் கெட்டிக்காரர் என தோனியை புகழ்ந்து பேசியுள்ளார்.

Categories

Tech |