இளைஞர் ஒருவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்த காரணத்தினால் நண்பர்கள் சேர்ந்து அவரை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள அங்கம்மா ராவ் என்ற நபர் அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தார். அவரது கள்ள உறவு பற்றி தெரிந்த நண்பர்கள் அதை கைவிடுமாறு அடிக்கடி எச்சரித்துள்ளனர். இதையடுத்து அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாகவே நண்பர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அங்கம்மா ராவ் நண்பர்களுடன் குடித்துக் கொண்டிருந்த போது அவர்களது கள்ள உறவு விவகாரம் சம்பந்தமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின் அங்கம்மா ராவ் மது போதை அதிகமாகி அவர்களுடன் சண்டையிட்ட போது அவர்கள் பெட்ரோல் ஊற்றி அவரை கொளுத்தியுள்ளனர். அப்போது உடலில் தீப்பிடித்து கதறி துடித்து உள்ளார். இதில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் தீ வைத்து கொளுத்திய அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.