கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாட்டி ஒருவர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு உணவுகளை விநியோகம் செய்து வருகிறார். அந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
கேரள மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 89 வயதான பாட்டி தனது காரில் இருந்தபடி உணவு பொட்டலங்களை அங்கு பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு விநியோகம் செய்து வருகின்றார் . இதையடுத்து அந்த பாட்டியிடம் பத்திரிகையாளர்கள் தன் அடையாளத்தை கேட்டபோது ஏன் இதையெல்லாம் கேட்கிறீர்கள்? நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா? என்று நகைச்சுவையுடன் கேட்டார். இருப்பினும் அவர் கடைசிவரை தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை.
மேலும் அந்த பாட்டியை பற்றி விசாரித்தபோது அவர் திருவனந்தபுரத்தில் ஒரு பகுதியில் வசித்து வருவதாகவும் அவர் இதுபோன்ற தொண்டுகளை பல ஆண்டுகளாக செய்து வருவதாகவும் கூறினார். ஒவ்வொரு முறை நகரத்திற்கு சென்று வரும்போது ஏழைகளை அடையாளம் கண்டு கொண்டு வந்து பின்னர் அவருக்கு உதவுவதே வழக்கமாக கொண்டுள்ளார் என்று அவரின் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கூறினர். தற்போது உள்ள காலகட்டத்தில் உறவினர் ஒருவருக்கு உதவி செய்ய முன்வராத நிலையில், தனது தள்ளாடும் காலத்தில்கூட பிறருக்கு உதவுவதை 89 வயதில் இவர் செய்து வருவது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.