கொரோனா இரண்டாம் அலையில் பெற்றோரை இழந்த 100 குழந்தைகளை தத்து எடுக்கும் பணியை டேராடூனை சேர்ந்த ஜாய் அறக்கட்டளை சேர்ந்த ஜெய் ஷர்மா என்பவர் செய்து வருகிறார்.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் பல உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது. பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். அந்த குழந்தைகளுக்கு அரசு தங்களால் இயன்ற உதவிகளை செய்யும் என்று தெரிவித்துள்ளது. இந்த சூழலில் உத்தரகாண்ட் சேர்ந்த ஜெய் ஷர்மா என்பவரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. பெற்றோரை இழந்த 100 குழந்தைகளை தத்தெடுக்க நிறுவனர் ஜெய் சர்மா முடிவு செய்துள்ளார். பெற்றோர்களை இழந்த குழந்தைகளை தத்தெடுக்கும் ஒரு பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார்.
ஏற்கனவே 20 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார் நிலையில் மீதமுள்ள குழந்தைகளை தத்தெடுக்கும் பணியில் முழு வேகத்தில் செயல்பட்டு வருகின்றார். அடுத்த வாரத்தில் 50 குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். கிராமங்கள் மற்றும் உள்ளுர் பகுதிகளுக்கு சென்று அங்கு மிகவும் கஷ்டத்தில் இருக்கும் குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்க போவதாகவும், தனது அறக்கட்டளை சார்பில் இதை நடத்த போவதாகவும் தெரிவித்துள்ளார். இவரது செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.