கேரளாவில் ஆசிரியர்கள் இருவர் ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டி கொடுத்து வருகின்றனர்.
ஒரு ஆசிரியர் ஆயிரம் புத்தகங்களுக்கு சமம் என்பதை உணர்த்துகிறது பின்வரும் சம்பவம், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியை லிஸ்ஸி மற்றும் இவரது தோழி இருவரும் ஆசிரியராவார். இவர்கள் இருவரும் நன்கொடை மூலம் நிதி சேகரித்து கடந்த 2014ஆம் ஆண்டு தந்தையை இழந்த ஒரு மாணவிக்காக வீடு கட்டிக் கொடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தற்பொழுது வரை வீடற்ற ஏழை மாணவிகளுக்காக 150 வீடுகள் கட்டி கொடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து ஆசிரியை லிஸ்ஸி கூறுகையில் சொந்த நிலம் இருந்தும் வீடு கட்ட வசதியில்லாத ஏழை மாணவிகளுக்கு நிரந்தர வீடு கட்டுவதற்கான ஹவுஸ் சேலஞ்ச் என்ற திட்டத்தையும் தொடங்கியிருப்பதாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.