Categories
மாநில செய்திகள்

“அந்த மனசு தான் சார் கடவுள்” பைக்கை மறித்த காவலர்…. பின்னர் நடந்தது என்ன…? – வைரல் வீடியோ…!!!

கர்நாடகாவைச் சேர்ந்த அருண் என்பவர் தென்காசிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது வழியில் போலீஸ்காரர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் அவரை வழிமறித்துள்ளார். அப்போது காவலர் கிருஷ்ணமூர்த்தி அருணிடம் ஒரு மருந்து பாட்டிலை கொடுத்து பேருந்தில் இருந்து பெண் ஒருவர் மருந்து பாட்டிலை தவறிவிட்டதாகவும், பேருந்தை விரட்டி சென்று மருந்து ஒப்படைக்குமாறும் கூறுகிறார்.

இதையடுத்து அருணும் விரட்டி விட்டு சென்று அந்த பேருந்தை மறித்து அந்த மருந்தை ஒப்படைக்கிறார். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் காவலர் மற்றும் அந்த நபர் இருவரையும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுபோன்று நல்லெண்ணம் கொண்ட மனிதர்கள் உலகில் இருக்கிறார்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |