நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக, மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஸ்மார்ட் போன் தேவைப்படுகின்றது. ஆனால் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் இல்லாததால் ஆன்லைன் படிப்பு என்பது எட்டாக்கனியாக உள்ளது.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த துளசி குமாரி(11) என்ற ஏழை மாணவி தன்னுடைய ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாததால், ஸ்மார்ட் போன் வாங்குவதற்க மாம்பழங்களை விற்று வந்துள்ளார். இதை அறிந்த மும்பையைச் சேர்ந்த அமரா ஹீட் என்பவர் ஒரு மாம்பழத்திற்கு ரூ.10000(பணத்தை இலவசமாக கொடுக்கக்கூடாது என கருதி) வீதம் கொடுத்து ரூ.1.2 லட்சத்திற்கு 12 மாம்பழங்களை வாங்கி உள்ளார். இவருடைய இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.