கர்நாடகாவில் உடுப்பி நகரில் நசீர் அகமது என்பவர் ஹோட்டல் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். தற்போது கர்நாடகாவில் ஊரடங்கு, கொரோனா, ஹிஜாப் விவகாரம் போன்ற பல சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இவர் பணம் இதுவும் பெற்றுக்கொள்ளாமல் ஏழைகளுக்கு உணவளித்து வருகிறார்.
மதியம் மற்றும் இரவு நேரங்களில் தினமும் 4 கிலோ அரிசி கூடுதலாக சாதம் சமைத்து தொழிலாளர்கள் ஆதரவற்றோர், முதியோர், என ஜாதி, மத, பாகுபாடின்றி அனைவருக்கும் உணவு வழங்கி வருகிறார். இதுபற்றி கூறிய அவர், மனிதநேயமே முதலில் வருகிறது. என்னுடைய குடும்பத்தில் சகோதர சகோதரிகள் என மொத்தம் 11 பேர் இருந்தோம்.
உணவில்லாத சூழ்நிலைகளை நாங்கள் சந்தித்துள்ளோம் எனவும், அதனால் தனக்கு வசதி கிடைத்தபோது கடந்த 10 ஆண்டுகளாகவே உணவு வழங்கும் செயலை நிறுத்த வில்லை எனவும் கூறினார். இந்த மனிதநேய செயலில் ஈடுபட்டு வரும் இவரை அப்பகுதி மக்கள் கடவுள் என அழைக்கின்றனர்.