Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அந்த மனசு தான் சார் கடவுள்….. கருணை இல்லத்தில் வளர்ந்த பெண்ணை….. கரம் பிடித்த ஆசிரியர்…. நல்லா இருக்கணும் நீங்க….!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை என்ற பகுதியில் இயங்கி வரும் கருணை இல்லத்தில் வளர்ந்து வந்தவர் இளம்பெண் திலகவதி. 27 வயதான இவருக்கு யாரும் இல்லாத காரணத்தினால் கடந்த 17 வருடங்களாக இந்த இல்லத்திலேயே வளர்ந்து படித்து பட்டமும் பெற்றார். இந்த நிலையில் ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். 35 வயதான அவர் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரியில் கணிதவியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இதனை அடுத்து இந்த இளம் பெண் திலகவதியை இவர் நேற்று சீர்திருத்த முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவர்கள் திருமண விழாவில் கலந்து கொண்ட நண்பர்கள் மத்தியில் நடந்த சற்று வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர். திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இன்றைய காலத்தில் சீர்வரிசையோடு பெண் தேடி அலையும் ஆண்கள் மத்தியில் இப்படியும் ஒரு நல்ல மனிதர் இருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த பேராசிரியர் விளங்குகிறார்.

Categories

Tech |