Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“அந்த மனசு தான் மேடம் கடவுள்” தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆட்சியர்….!!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரையடுத்து அங்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் கீழ் இந்த கொடூர செயலை செய்த நபர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ஆய்வு செய்கையில் 5 தலைமுறையாக கோவிலில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவது தெரியவந்தது. உடனடியாக ஆதிதிராவிட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தார் கவிதா. சாமி வந்தது போல் ஆடி பழங்குடியினரை அவதூறாக பேசிய பெண் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

Categories

Tech |