Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுங்க… கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கையில் திடீரென தனியார் மருத்துவமனையில் இறந்த பெண்ணிற்க்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மல்லாக்கோட்டை கிராமத்தில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்ல பிரியா என்ற மனைவியும், அஸ்வந்த் என்ற மகனும், அவந்திகா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் சென்ற மாதம் 3-ம் தேதி செல்லபிரியா உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக மதகுபட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் ஊசி போட்ட சில மணி நேரத்திலேயே செல்லபிரியா மயங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மதகுபட்டி காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் செல்லபிரியா இறந்து ஒரு மாதமாகியும் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட வழக்கிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த செல்லபிரியாவின் உறவினர்கள் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்தும், வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற கோரியும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சிவகங்கை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டியன், வட்டாட்சியர் தர்மலிங்கம், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் செல்லபிரியாவின் உறவினர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |