நடந்து சென்ற 5 பேரை கதண்டுகள் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகல்குழி கிராமத்தில் செங்கா முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் இருக்கும் முந்திரி தோட்டத்தில் கதண்டுகள் கூடு கட்டியுள்ளது. இந்நிலையில் அவ்வழியாக நடந்து சென்ற வடிவேல், சக்கரவர்த்தி உட்பட சிலரை கதண்டுகள் கடித்தது.
இதனை அடுத்து காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது அந்த வழியாக யாரும் நடந்து செல்ல முடியவில்லை. எனவே பொதுமக்களை கடிக்கும் கதண்டுகளை அழிக்க தீயணைப்புதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.