Categories
சினிமா

“அந்த வாய்ப்பு கிடைச்சா விட மாட்டேன்”…. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…..!!!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தித் திரைப்படத்தை இயக்குவதில் ஆர்வம் செலுத்துகிறார். அவர் அவ்வப்போது இணையத்தளத்தின் வழியே ரசிகர்களுடன் உரையாடுவார். இந்நிலையில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது, இந்தியில் நான் “ஓ சாத்தி சால்” படத்தை இயக்குவதன் வாயிலாக அங்கு இயக்குனராக களமிறங்கி இருக்கிறேன். இதுஒரு மிகச்சிறந்த, உண்மையான காதல் கதை ஆகும். நான் இடையில் ஒரு இடைவெளி விட்டு விட்டேன். என் மகன்களிடம் நேரம் செலவழிக்கவே அப்படி செய்தேன். தற்போது அவர்கள் வளர்ந்து விட்டார்கள்.

இதையடுத்து எனக்கு அப்போதே இந்தி படங்களை இயக்க வாய்ப்புவந்தது. ஆனால் தற்போது வாய்ப்பில்லை என்றே தவிர்த்து வந்த நிலையில், இப்போது நான் மீண்டும் சினிமா இயக்கபோகிறேன். என்னுடைய மகன்கள் வளர்ந்துவிட்டார்கள், எல்லோரும் அப்பாவை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள் என்று கேட்கிறார்கள். ஆனால் தனக்கு அந்த எண்ணம் கிடையாது. நான் அவருடைய ரசிகையாக இருந்தால் மட்டுமே போதும் என அதனை ரசித்துக்கொண்டிருக்கிறேன். எனினும் அப்படிஒரு வாய்ப்பு கிடைத்தாக யார்தான் வேண்டாமென்று சொல்வார்கள் என்றார்.

Categories

Tech |