Categories
சினிமா

“அந்த வார்த்தையை கேட்டாலே எரிச்சல் வருகின்றது”… பேட்டியில் கூறிய துல்கர் சல்மான்…!!!

“பான் இந்தியா” என்ற வார்த்தையை கேட்டாலே எரிச்சலாக வருகின்றது என துல்கர் சல்மான் கூறியுள்ளார்.

நடிகர் துல்கர் சல்மான் மலையாளம், தமிழ் என இரண்டிலுமே பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் “பான் இந்தியா” படம் பற்றி தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ஒரு மொழியில் அவர்களின் கலாச்சாரத்தை மையப் படுத்தி எடுக்கும் திரைப்படம்தான் பான் இந்தியா என கூறுவதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை.

அந்த வார்த்தையை கேட்டாலே எனக்கு எரிச்சல்தான் வருகிறது என கூறியுள்ளார். ஒரு கலாச்சாரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படமானது அங்கு வெளியானால் மட்டுமே வெற்றி பெறும் அதுவே பல மொழிகளில் வெளியானால் அந்த அளவிற்கு வெற்றி பெறாது. ஒவ்வொரு மொழிகளிலும் ஒவ்வொரு கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர். இதனால்தான் துல்கர் சல்மான் இப்படி கூறியிருக்கிறார் என இந்த கருத்து பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Categories

Tech |