Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

“அந்த விஷயத்திற்காக முதல்வரை விஜய் சந்திக்கவில்லை”… பேட்டியில் கூறிய பிரபல தயாரிப்பாளர்…!!!

நடிகர் விஜய் ஸ்டாலினை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் கே.ராஜன்.

பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருவது குறித்து கேள்வி கேட்ட பொழுது அவர் கூறியுள்ளதாவது, சென்சாருக்கு சென்று வந்த பிறகு படத்தை தடை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார். கோடி கோடியாக பணம் போட்டு படம் எடுத்தால் தடை செய்வீர்களா? அனுமதி தந்த சென்சார் போர்டுகிட்ட போய் போராடுங்கள் என கூறியுள்ளார்.

விஜய்யின் ஒரு படத்திற்கு மத்திய அரசு பிரச்சனை கொடுக்க, மற்றொரு படத்திற்கும் மாநில அரசு பிரச்சனை கொடுத்தது. ஏன் மாநிலத் தலைவியே பிரச்சனை கொடுத்திருந்தார். ரைடுக்கு பிறகு விஜய் பேசாமல் அமைதியாக இருக்கின்றார். மேலும் படத்தின் ஆடியோ லான்ச் கூட நடத்தவில்லை. விஜய், முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்தது படத்திற்காக என கூறப்பட்டு வரும் நிலையில் அது குறித்தும் கே.ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். படத்திற்காக விஜய் முதல்வர்களை சந்திக்கவில்லை. மக்களுக்காக அவர் குரல் கொடுத்தது இல்லை என்பது உண்மைதான். விஜய் எந்த படத்திற்காகவும் முதல்வர்களை சந்தித்ததில்லை என கூறியுள்ளார்.

தியேட்டரில் ஸ்பெஷல் ஷோக்களை தடை செய்து அதிக கட்டணத்திற்கு டிக்கெட்கள் விற்கக் கூடாது என கூறியுள்ளார். மேலும் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கு பதிலாக ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். அஜித் ரசிகர்களை சந்தித்ததே இல்லை. ஆனால் ரசிகர்கள் அவரின் காலில் விழுகிறார்கள். விஜய் நல்ல லீடராக வேண்டுமென்றால் பால் அபிஷேகம் செய்யாமல் பட்டாசு வெடிக்காமல் அப்பா அம்மாவை கவனித்துக் கொள்ளுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |