Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“அந்த 2 பேர் தான் காரணம்”…. தற்கொலைக்கு முயன்ற விவசாயி…. பரபரப்பு சம்பவம்…!!!

விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் பகுதியில் விவசாயியான சுப்பிரமணி(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நுழைவு வாயிலில் இருந்த போலீசார் சுப்பிரமணி கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அப்போது திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை சுப்பிரமணி உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

அவரை தடுத்து நிறுத்தி போலீசார் நடத்திய விசாரணையில் சுப்பிரமணி கூறியதாவது, எனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை இரண்டு பேர் அபகரித்துக் கொண்டனர். அதனை திருப்பி கேட்டால் என்னை தாக்க முயற்சி செய்கின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாக சுப்பிரமணி தெரிவித்துள்ளார். பின்னர் அவரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |