தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார். இவர் தற்போது ஆதிபுருஷ் மற்றும் சலார் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பாலகிருஷ்ணா நடிகர் பிரபாஸிடம் திருமணம் மற்றும் காதல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நடிகர் பிரபாஸ் சல்மான் கான் திருமணம் செய்து கொண்ட பிறகு தான் நான் திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளார். இது பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் சல்மான் கானுக்கு தற்போது 56 வயது ஆகும் நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவில் இல்லாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இதனால்தான் பிரபாஸ் சொன்ன தகவல் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. நடிகை கீர்த்தி சனோன் மற்றும் பிரபாஸ் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் அது பொய் என்று தெரியவந்தது. இருப்பினும் பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்த அனுஷ்காவை தான் நடிகர் பிரபாஸ் திருமணம் செய்து கொள்வார் என்று தற்போதும் பலரும் நம்புகிறார்கள். மேலும் நடிகர் பிரபாஸுக்கு பாகுபலி திரைப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் 6000 பெண்கள் ப்ரொபோஸ் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.