அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் கொரோனாவால் காலமானார். அவருடைய வயது 93. சென்னை தனியார் மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவர் ஐஐடி கான்பூர் தலைவராகவும், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் கனிமொழி இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், “அவரை சந்திக்கும் வாய்ப்பு பெற்ற போதெல்லாம் கல்வி என்பது சமூகத்தை மேம்படுத்த வழியாகவும், சமூக நீதிக்கான பாதையாக இருக்க வேண்டும் என்பது வலியுறுத்துவார். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.