Categories
தேசிய செய்திகள்

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் செல்லும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வழியாக கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையில் இருந்து இரவு 8.10மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு மறுநாள் காலை 6.45 மணிக்கு வந்தடையும். ஆனால் தற்போது 6.35 மணிக்கு வந்து 6.40 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.நாகர்கோவில் சந்திப்பிற்கு சென்று விட்டு திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்லும்.

அதனால் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் காலதாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் பணிக்கு செல்ல கூடியவர்கள் ரயிலில் செல்வதால் ஒரு மணி நேரத்திற்கு முன்பே ரயில் புறப்படுவது மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த ரயில் கொல்லத்திற்கு முன்பு பன்னண்டு புள்ளி 10 மணிக்கு சென்றது. தற்போது 11.10 மணிக்கு செல்கிறது.இதனைப் போலவே கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில் நாகர்கோவில் சந்திப்புக்கு செல்லாமல் வருவதால் பயணிகளுக்கு அதிக நேரம் மிச்சமாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |